Vijay - Favicon

பசறையில் அதிகாலையில் இடம்பெற்ற கோரம் – 2 வருடங்களின் பின்னர் அதே நாளில் அதே இடத்தில் சம்பம்!


பதுளை மாவட்டத்துக்குட்பட்ட, பகுதியில் காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஆசிரியர் ஒருவர் பலியாகியுள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 இந்த விபத்து சம்பவம் இன்று (20.03.2023) காலை பதுளை மாவட்டம் பசறை 13 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

பதுளை- செங்கலடி வீதியின், பசறை 13 ஆவது மைல்கல் பகுதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து பாடசாலை கடமைடக்காக புறபட்டு சென்ற ஆசிரியரே குறித்த விபத்தில் பலியாகியுள்ளார்.

ஆசிரியர் பலி

பசறையில் அதிகாலையில் இடம்பெற்ற கோரம் - 2 வருடங்களின் பின்னர் அதே நாளில் அதே இடத்தில் சம்பம்! | Badulla Accident Death School Teacher Police

இவர் பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட ஹொப்டன் கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றும் பரணிதரன் வயது -39 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து பிரதான வீதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இன்று காலை 7.30 மணியளவிலேயே இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.




விபத்தில் படுகாயமடைந்த குறித்த ஆசிரியர் பசறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் இரு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதி வேகத்தால் ஏற்பட்ட விபத்து

பசறையில் அதிகாலையில் இடம்பெற்ற கோரம் - 2 வருடங்களின் பின்னர் அதே நாளில் அதே இடத்தில் சம்பம்! | Badulla Accident Death School Teacher Police




விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பசறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



குறித்த விபத்து இடம்பெற்ற இடத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இதே நாளில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி 13 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *