Vijay - Favicon

யாழில் 52 நாட்களேயான சிசுவின் உயிரிழப்பு – வெளியாகிய பிரேத பரிசோதனை அறிக்கை!


யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் சிசு உயிரிழந்திருந்தது.


இந்த சிசுவின் இறப்புக்கு போதிய போசாக்கின்மையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.


இந்த ஆண் சிசு மூச்சயர்ந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

சிசுவின் உயிரிழப்பு  

யாழில் 52 நாட்களேயான சிசுவின் உயிரிழப்பு - வெளியாகிய பிரேத பரிசோதனை அறிக்கை! | Baby Death Jaffna Post Mortem Report Released

இந்த மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி திருமதி அன்ரலா விஞ்சன் தயான் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.



உடற்கூற்று பரிசோதனை 15 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற நிலையில், போதிய போசாக்கின்மை காரணமாக உயிரிழப்பு இடம்பெற்றதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிசுவின் தாயாருக்கு உடலில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாகவே சிசுவிற்கு கொடுக்கிற பாலில் போசாக்கின்மை இருந்தமையால் சிசு உயிரிழந்துள்ளது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *