காவல்துறையினரின் உத்தரவை மீறி பயணித்த மகிழுந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொல்கஹவெல பகுதியில் குறித்த மகிழுந்து பயணம் செய்தபோது, காவல்துறையினர் குறித்த மகிழுந்தை நிறுத்தியுள்ளனர், எனினும் சாரதி மகிழுந்தை நிறுத்தாமல் சென்றமையால் காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மகிழுந்தில் பயணித்தவர்கள்
பின்னர், குறித்த மகிழுந்தில் பயணித்த பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.