Vijay - Favicon

யாழில் வன்முறை கும்பலால் வீடொன்று தீக்கிரை – வெளியான பின்னணி (படங்கள்)


அச்சுறுத்தல்

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்றினால் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டள்ளது.


குறித்த வீட்டினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை உட்புகுந்த நால்வர் அடங்கிய வன்முறை கும்பல் வீட்டில் இருந்தோரை அச்சுறுத்தி வீட்டுக்கு தீ வைத்துள்ளனர்.



தீ வீடு முழுவதும் பரவியதில் வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை உட்பட பெறுமதியான பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

வன்முறை கும்பல்

யாழில் வன்முறை கும்பலால் வீடொன்று தீக்கிரை - வெளியான பின்னணி (படங்கள்) | Attack On A House Jaffna

குறித்த வீட்டில் வசிக்கும் 15 வயதான சிறுமியை தனக்கு திருமணம் செய்து தருமாறு இளைஞன் ஒருவர் வற்புறுத்தி வந்ததாகவும், அதற்கு வீட்டார் சம்மதிக்காத நிலையில், இளைஞனின் குழுவால் அவர்களுக்கு அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வந்த நிலையில், அந்த குழுவினரே வீட்டினுள் நுழைந்து வீட்டுக்கு தீ வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் வன்முறை கும்பலால் வீடொன்று தீக்கிரை - வெளியான பின்னணி (படங்கள்) | Attack On A House Jaffna

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *