டி20 உலகக் கோப்பையின் போது இலங்கை கிரிக்கெட் வீரர்களின் நடத்தை குறித்து சுயாதீன குழு மூலம் ஆழமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தேசிய விளையாட்டு கவுன்சில் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் அமைச்சின் அதிகாரிகளிடம் விளக்கமளிக்கக் கோரி அணியின் தலைவர், பிரதான பயிற்றுவிப்பாளர் மற்றும் அணியின் முகாமையாளர் ஆகியோர் இன்று (10) விளையாட்டு அமைச்சுக்கு அழைக்கப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
(வீடியோ: adaderana.lk)