பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் இருந்து அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு புதிய ஒருவரை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான கடிதத்தை ஜனக ரத்நாயக்கவிற்கு நிதியமைச்சின் செயலாளர் அனுப்பி வைத்துள்ளார் எனவும் அதனை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
46 மேலதிக வாக்குகள்
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.