Vijay - Favicon

காவல்துறை நாய் \”ஏஜர்\” இன் மற்றுமொரு கண்டுபிடிப்பு


கண்டி அஸ்கிரிய காவல்துறை உத்தியோகபூர்வ நாய் “ஏஜர்” நாட்டரன்பொத பிரதேசத்தில் ஒப்பந்ததாரர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம், பணம் மற்றும் இருபதாயிரம் பெறுமதியான வாசனை திரவிய போத்தல் என்பவற்றை திருடிய நபரை கைது செய்யஉதவியுள்ளது.

இதனையடுத்து வத்தேகம காவல்துறையினரால் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


உத்தியோகபூர்வ காவல்துறை நாய் சந்தேக நபரின் வீட்டிற்குள் நுழைந்தபோது சந்தேக நபர் அங்கு இருக்கவில்லை.

திருடப்பட்ட வீட்டில் இருந்து திருடப்பட்ட வாசனை திரவிய போத்தல் அடங்கிய பெட்டியை காவல்துறை உத்தியோகபூர்வ நாயிடம் வழங்கியதாக அஸ்கிரிய காவல்துறை உத்தியோகபூர்வ நாய் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 மூன்று கிலோமீட்டர் தூரத்தை கடந்த பின்னர் 

காவல்துறை நாய்


காவல்துறை உத்தியோகபூர்வ நாய் பிரிவின் படி, வாசனை திரவிய பெட்டியில் இருந்து வந்த வாசனை திரவியத்தை கொண்டு மூன்று கிலோமீட்டர் தூரத்தை கடந்த பின்னர் காவல்துறை உத்தியோகபூர்வ நாய் சந்தேக நபர் வசிக்கும் வீட்டிற்குள் நுழைந்து வீட்டின் அறையொன்றின் தரையில் இருந்து பலகையை அகற்றியது.



சந்தேக நபர் இரவில் இந்த பலகையில் தூங்குவதாக வீட்டில் உள்ளவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.



உத்தியோகபூர்வ காவல்துறை நாய் கண்டி அஸ்கிரிய காவல்துறை உத்தியோகபூர்வ நாய் பிரிவைச் சேர்ந்த பி.ஜி.ஜயரத்ன (42320) அவர்களால் வழிநடத்தப்பட்டது. அந்த பிரிவின் உதவி காவல்துறை பரிசோதகர் ராஜபக்ச, மேற்பார்வை அதிகாரியாக செயல்பட்டுள்ளார்.

பெண் கொலை இராணுவ சிப்பாயை அடையாளம் காட்டிய நாய்

காவல்துறை நாய்

கண்டி அலவத்துகொட பகுதியில் அண்மையில் திருமணமான 27 வயதான இளம் பெண்ணொருவர் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்

இந்த சந்தேகநபரை கண்டுப்பிடிப்பதற்கு ‘ஏஜர்’ என்ற இந்த மோப்பநாய் உதவி புரிந்தமை குறிப்பிடத்தக்கது.  



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *