ஆரம்ப ஆசிரியர்களின் இடமாற்றக் கடிதங்கள் இன்று (21) தபாலில் அனுப்பி வைக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று (21) இடம்பெற்ற நாடாளுமன்றஅமர்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதேவேளை, நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த அமைச்சர், பிள்ளைகளின் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர் இடமாற்றங்கள் இடம்பெற்றால் மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக குறிப்பிட்டார்.
மூன்று வருட இடமாற்றங்கள்
மேலும், கடந்த மூன்று வருடங்களில் 8,893 ஆசிரியர் இடமாற்றங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.