Vijay - Favicon

கால்நடை உற்பத்தி விவசாயிகள் சங்கத்தினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை ..!


கால்நடை போக்குவரத்து மற்றும் கால்நடை உற்பத்தி விவசாயிகள் சங்கத்தின் கூற்றுப்படி, நாட்டில் உள்ள பன்றி பண்ணைகளை சுற்றி அதிகமான தொற்றுநோய் பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேல் மாகாணத்தில் இந்த நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பன்றி பண்ணைகளைச் சுற்றி பரவும் PRRS எனப்படும் இந்த தொற்றுநோய் நிலைமை 2020 இல் இலங்கையில் அடையாளம் காணப்பட்டது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி

கால்நடை உற்பத்தி விவசாயிகள் சங்கத்தினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை ..! | Announcement Health Sri Lankan Risk Of Infection

அப்போது இலங்கைக்கு தேவையான தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டு பன்றிகளுக்கு வழங்கப்பட்டதால் தொற்றுநோய் நிலைமை கட்டுக்குள் இருந்தது.


அண்மைக்காலமாக பன்றிப் பண்ணை உரிமையாளர்கள் தடுப்பூசிகள் வழங்குவதை இடைநிறுத்தியமையால் தொற்றுநோய் நிலைமை மீண்டும் மோசமடைந்துள்ளதாக கால்நடை போக்குவரத்து மற்றும் கால்நடை உற்பத்தி விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


மேல்மாகாணத்தை சூழவுள்ள இந்த நிலைமை கலேவெல, வஹாக்கோட்டை, மாத்தளை, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் உள்ள பன்றிப் பண்ணைகளிலும் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *