Vijay - Favicon

சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களை அமெரிக்க திரட்டியது – கோட்டாபய உடன்படிக்கை இந்தியாவின் தோல்வி..!


விடுதலைப்புலிகள் அமைப்பை அழிப்பதற்கு அமெரிக்க உதவினாலும் சிறிலங்காவின் போர்க்குற்றங்களை அமெரிக்க வேகமாக திரட்டியது என இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.

ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.



இதன்போது, அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பல் மற்றும் 75 யுத்த விமானங்கள் 500இற்கும் அதிகமான ஆயுதம் தரித்த அமெரிக்க படையினர் அந்த கப்பலில் தரித்திருக்கும் சூழ்நிலை இருக்கும் என கூறப்படுகிறது.

தாக்குதல் விமானங்கள்

america gotabaya

அப்படியானதொரு கட்டமைப்பிலா மிதக்கும் இராணுவத்தளம் இருக்கப் போகிறது என கேள்விக்கு பதிலளிக்கும் போது, “உண்மை தான். அமெரிக்காவில் ஏறத்தாழ 10 விமானம் தாங்கி கப்பல்கள் இருக்கின்றன.

உலகத்தில் அதிக விமானம் தாங்கி கப்பல்கள் இருக்கின்ற நாடு அமெரிக்கா தான். USS ஜெரால்ட் R4இன் எடை ஏறத்தாழ ஒரு இலட்சம் தொன்.


அது மிகப்பெரிய கப்பல். பெருமளவான தாக்குதல் விமானங்கள் தரித்து நிற்கக்கூடிய ஒரு கப்பல். அந்த ஒரு கப்பல் வந்து நிற்குமாக இருந்தாலே இந்து சமுத்திர பிராந்தியத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் சக்தி வாய்ந்தது.

போரை பயன்படுத்தி உடன்பாடு

சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களை அமெரிக்க திரட்டியது - கோட்டாபய உடன்படிக்கை இந்தியாவின் தோல்வி..! | American War Foce Sri Lanka Risk Of Entry

அதற்கான ஒரு ஏது நிலையை தான் இந்த ஏசிஎஸ்ஏ வழங்கியிருந்தது.” என குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், போரை பயன்படுத்தி 2007ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவின் ஊடாக உடன்பாடொன்று எட்டப்பட்ட நிலையில், அது அமெரிக்காவிற்கு கிடைத்த முதலாவது வெற்றி என்பதுடன் இந்தியாவிற்கு கிடைத்த முதலாவது தோல்வி எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *