அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சி பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமெரிக்க காங்கிரஸின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபையின் 435 ஆசனங்களுக்கும்
கடந்த 8 ஆம்திகதி நடைபெற்ற தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி 218 ஆசனங்களை வென்றுள்ளதாக
அமெரிக்க பிரதான ஊடகங்கள் கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இச்சபையில் பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு 218 ஆசனங்கள் தேவைப்படும் எனவும் அக்கட்சி மொத்தமாக 218 முதல் 223
வரையான ஆசனங்களை வெல்லும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனநாயகக் கட்சி
இத்தேர்தலில் நாடாளுமன்றத்தின் மேல் சபையான செனட் சபையில் அதிபர் ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி ஓர் ஆசனத்தினால்
பெரும்பான்மையைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அக்கட்சி 50 ஆசனங்களை வென்றுள்ளதாக கணிப்பிடப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.