Vijay - Favicon

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள அமெரிக்காவின் முதலாவது சொகுசு பயணிகள் கப்பல்!


அமெரிக்காவின் முதலாவது சொகுசு பயணிகள் பயணக் கப்பலான ‘வைக்கிங் மார்ஸ்’ (Viking Mars ) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குப் பின்னரான முதலாவது சொகுசு பயணிகள் கப்பலான இந்தக் கப்பல் இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குளிர்கால சுற்றுலாப் பருவத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கும் வகையில் இந்த கப்பல் சிறிலங்கா வந்துள்ளது.

முதலாவது சொகுசு கப்பல்

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள அமெரிக்காவின் முதலாவது சொகுசு பயணிகள் கப்பல்! | America Tourist Tourism Sri Lanka Us Luxury Ship



900 சுற்றுலாப் பயணிகளுடன் சிறிலங்கா வந்துள்ள குறித்த கப்பல் நாளை வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் நோர்வே நாட்டுக் கொடியின் கீழ்வந்த இந்தக் கப்பல், சிறிலங்கா வருவதற்காக கடந்த 16ஆம் திகதி, இந்தியாவின் கோவாவிலிருந்து புறப்பட்டிருந்தது.

முக்கிய இடங்களுக்கு பயணம்

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள அமெரிக்காவின் முதலாவது சொகுசு பயணிகள் கப்பல்! | America Tourist Tourism Sri Lanka Us Luxury Ship


கப்பலில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகள், சிறிலங்காவின் முக்கிய இடங்களை பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


அதன்படி, கண்டி, பின்னவெல, காலி போன்ற நகரப் பயணங்கள், கொழும்பின் சில முக்கிய இடங்களுக்கு அவர்கள் அழைத்துச் செல்லபப்படவுள்ளதோடு, ஆற்று படகு சுற்றுலா சவாரிகளையும் மேற்கொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *