தான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் புடினுடன் பேசி வெறும் 24 மணி நேரத்தில் போரை நிறுத்தச் செய்ய முடியுமென அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவை சீனாவின் கைகளுக்குள் தூக்கிக் கொடுத்ததே பைடன் தான். அத்துடன் தான் அதிபராக இருந்திருந்தால் ரஷ்ய-உக்ரைன் போரே ஏற்பட்டிருக்காது என்றும், ஏன் என்றால் தான் என்ன சொன்னாலும் ரஷ்ய அதிபர் புதின் கேட்பார் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, 2024 ஆம் ஆண்டு தான் அமெரிக்காவின் அதிபர் ஆனால் அமெரிக்காவிற்கு மட்டுமல்ல உலகிற்கே பல நன்மைகள் வந்து சேரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
உலகிற்கே பேராபத்து
மேலும், தான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் புதினுடன் பேசி வெறும் 24 மணி நேரத்தில் போரை நிறுத்தச் செய்ய முடியும் என்றும் கூறிய அவர் தற்போதைய அமெரிக்க அரசு போரை ஒழுங்காக கையாளவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இப்போது உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்கி வரும் பைடன், அடுத்து அணு ஆயுதங்களை
வழங்குவார் என்றும், இது உலகிற்கே பேராபத்தாய் முடியும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மூன்றாம் உலகப் போர்
இது போன்ற சூழ்நிலைகள் தொடர்ந்தால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், அப்படி ஏற்படாமல் தடுக்கும் வல்லமை தனக்கு மட்டுமே இருப்பதாகவும் பரப்புரையின் போது கூறி தனக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.