Vijay - Favicon

கிழக்குக்கு விரைவில் விமான சேவைகள் – அமைச்சர் உறுதியளிப்பு..!


கிழக்கு மாகாணத்திற்கான விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது தொடர்பில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.


இதன்மூலம், கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்பாடுகள் 

கிழக்குக்கு விரைவில் விமான சேவைகள் - அமைச்சர் உறுதியளிப்பு..! | Air Services To East Province Soon Ministar Said

குறித்த சந்திப்பில்,

கிழக்கு மாகாணத்தில் உள்ள இரண்டு விமான நிலையங்கள் மற்றும் பல கடல் விமானங்கள் இறங்கும் தளங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளமை குறித்து அமைச்சரின் கவனத்துக்கு கிழக்கு ஆளுநர் கொண்டு வந்துள்ளார்.


குறித்த விடயங்களை கவனத்தில் எடுத்த அமைச்சர், விமான சேவைகளை ஆரம்பிக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார்.


இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர், விமானப் போக்குவரத்து பணிப்பாளர், சுற்றுலா பணியகம், விமானப்படை, cinnamon Air மற்றும் ஏனைய தனியார் சேவையாளர்களும் கலந்துகொண்டனர்.


மேலும் cinnamon Air தனது விமானச் சேவையை ஜூலை மாதத்திலிருந்து ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளது.


இதனை ஊக்குவிக்க கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் தனது முழுமையான ஆதரவை வழங்கும் எனக் கூறியுள்ளது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *