இந்த ஆண்டுக்கான மே தினக் கொண்டாட்டத்தை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்த ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.
மே 1ஆம் திகதி காலை 10 மணிக்கு மே தினப் பேரணி தொடங்குகிறது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சி முகாமைத்துவ சபை கூட்டத்தில் மே தின கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.
பாலித ரங்கே பண்டார தலைமையில்
கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தலைமையில் மேதினப் பேரணி ஏற்பாடு செய்யப்படுவதாகவும், சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறும் மே தினப் பேரணியில் நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்துகொள்வார்கள் எனவும் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
கொரோனா நெருக்கடி காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி கடந்த மூன்று வருடங்களாக மே தினக் கூட்டங்களை நடத்தவில்லை.