Vijay - Favicon

தொடர்ந்தும் தமிழரை வீதிக்கும் இழுக்கும் செயற்பாடு -டக்ளஸ் குற்றச்சாட்டு


தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி, அதனை தமது அரசியல் நோக்கங்களுக்காக உபயோகிப்பவர்கள் தொடர்ந்தும் அதனையே முன்னெடுக்கின்றனரென
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு
காணாது மக்களை வீதிக்கு இழுப்பதிலேயே
அவர்கள் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், புலி வாலைப்
பிடிப்பதாக கூறி
அவர்கள் பூனை
வாலையே பிடித்
துள்ளனர் என்றும்
தெரிவித்தார்.

ஏன் அரசியலுக்கு வந்தோம்

நாடாளுமன்றத்தில் நேற்று
நடைபெற்ற போதைப்பொருள் திருத்தச்
சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும்
போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு
தீர்வு காண்பதற்காகவே நாம் அரசியலுக்கு வந்தோம். எமக்கு அதிகளவு வளங்கள் காணப்படுகின்றன.
அவற்றை சரியாக பயன்படுத்தினால்
அதன் மூலமான நன்மைகளை
பெற்றுக் கொள்ளலாம்.

அண்மையில் நான் முல்லைத்தீவுக்கு
சென்று பல கிராமங்களை நேரில் பார்வையிட்டேன். அந்த கிராமங்கள் கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளன.
அதனால் மீனவர்களின் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அது தொடர்
பில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை
சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.

சட்டவிரோத மீன்பிடித் தொழில்

சட்டவிரோத மீன்பிடித் தொழில்
தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்
கப்பட்டுள்ளன. படகுகள் அதிகரிக்கப்பட்
டுள்ளன. கடல் வளங்களின் அதிகரிப்பு
தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்
டியுள்ளது.நவீன ஆய்வுகளுடன் அதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
தடை செய்யப்பட்ட மீன் பிடித்தொழில் தொடர்பில் கண்காணிப்பதற்கும்
அதனை தடுப்பதற்கும் பொறிமுறையொன்று உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *