Vijay - Favicon

யாழ் – சாவகச்சேரியில் விபத்து – ஐபிசி தமிழ்


யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதான வீதியில் அரசடி சந்தியில் கப்ரக வாகனமும் டிப்பரும் மோதி விபத்து சம்பவித்துள்ளது.


யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி ச்சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளோடு மோதுவதை தவிர்ப்பதற்காக எதிர் திசையில் திடீரென திருப்பிய பொழுது முன்னால் வந்த கப்ரக வாகனத்தோடு பலமாக மோதியது.

டிப்பர் சாரதி தப்பியோட்டம்

யாழ் - சாவகச்சேரியில் விபத்து | Accident Today In Jaffna

நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கப்ரக வாகனம் முற்றாகச் சேதமடைந்தது.

விபத்தை அடுத்து டிப்பர் சாரதி டிப்பர் வாகனத்தை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

விபத்தில் கப் சாரதிக்கு தெய்வாதீனமாக எந்த காயங்களும் ஏற்படவில்லை.

விபத்து தொடர்பாக சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனைச் சந்தி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery
Gallery
Gallery



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *