Vijay - Favicon

யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு (படங்கள்)


யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு குடத்தனைச் சந்தி பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.


குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,



அம்மன் பகுதியிலிருந்து மணல் ஏற்றிக் கொண்டு பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பார ஊர்தியும், பருத்தித்துறை பகுதியிலிருந்து மருதங்கேணி நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சாரதி கைது

யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து - குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு (படங்கள்) | Accident Police Investigating Srilanka Jaffna

பலியானவர் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியை சேர்ந்த சின்னையா கணேசன் சிங்கம் (44) என தெரிவிக்கப்படுகிறது.



அவரோடு கூட வந்த பெண் பிள்ளை (மகள்) தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



சாரதி கைது செய்யப்பட்டதுடன் விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Gallery



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *