யாழ் கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகுதியில் வீடொன்றில் இயங்கி வந்த தனியார் விருந்தினர் விடுதியில் எவருமற்ற நிலையில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இச் சம்பவம் இன்று காலை ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
மின்னொழுக்கே தீ விபத்துக்கு காரணமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சுமார் எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளது.
மேலதிக விசாரணை
இது குறித்து யாழ் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் யாழ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.