தனமல்வில காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தனமல்வில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மின்சார வேலியில் சிக்கியிருந்த மானை காப்பாற்ற முயற்சித்த போதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
28 வயதான டபிள்யூ.ஆர்.லஹிரு சம்பத் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த நபரின் வீட்டின் பின்பக்கத்தில் இருந்த மின்சார வேலியில் சிக்கியிருந்த மானின் சத்தம் கேட்டு அதனை காப்பாற்ற மானின் அருகில் சென்றபோது, அவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில், உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனைகளை எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.