Vijay - Favicon

வெளிநாடொன்றில் உள்ள இலங்கையரை கைது செய்ய திறந்த பிடியாணை


டுபாயில் உள்ள இலங்கையரான லலித் கன்னங்கர என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் வியாபாரியை கைது செய்வதற்கு சர்வதேச காவல்துறையினரால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் திறந்த பிடியாணையும் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் அவிசாவளை நீதிமன்றில் அவரை கைது செய்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த கொலைகளின் சூத்திரதாரி

வெளிநாடொன்றில் உள்ள இலங்கையரை கைது செய்ய திறந்த பிடியாணை | A Warrant Issued Arrest Of A Sri Lankan Dubai

டுபாயில் தலைமறைவாக இருந்து ஹங்வெல்ல மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பல கொலைகளுக்கு தலைமை தாங்கி பலரை கூரிய ஆயுதங்களால் வெட்டி பலத்த காயங்களை ஏற்படுத்திய பிரதான சந்தேகநபர், போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்துபவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வர்த்தகர்களிடம் கப்பம்

வெளிநாடொன்றில் உள்ள இலங்கையரை கைது செய்ய திறந்த பிடியாணை | A Warrant Issued Arrest Of A Sri Lankan Dubai

 டுபாயில் இருந்து ஹன்வெல்ல உணவக உரிமையாளரின் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், ஹங்வெல்ல மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள வர்த்தகர்களிடம் கப்பம் பெறும் மோசடிக்கு சந்தேகநபர் தலைமை தாங்கியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *