கண்டியிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த தொடருந்து, கொக்கல பகுதியில் கார் ஒன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொக்கல விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ள தொடருந்து கடவையின் ஊடாக கவனக்குறைவாக பயணிக்க முற்பட்ட கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் பின்னர் காருக்குள் 2 பேர் சிக்கிக் கொண்டதையடுத்து, அவர்களைக் காப்பாற்ற அப்பகுதி மக்கள் கடுமையாக போராடிய போதும், குறித்த இருவரும் காரின் உள்ளேயே உயிரிழந்திருந்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.