நேற்றைய தினம் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு காரணமாக, இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 90 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனை, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
பணிப்புறக்கணிப்பு காரணமாக மக்கள் தமது அத்தியாவசிய பயணங்களை நிறுத்தியமையே குறித்த வருமான இழப்புக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினம் தனியார் பேருந்துகளின் வருமானமும் 15 முதல் 20 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்ததாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.