Vijay - Favicon

இலங்கையில் அதிகரிக்கும் காசநோய் -மருத்துவ நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை


நாடளாவிய ரீதியில் 8342 காசநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் சமூக நிபுணர் திருமதி மிசாயா காதர் தெரிவித்தார்.


மேல் மாகாணத்தில் இருந்து அதிக காசநோயாளிகள் இனங்காணப்பட்டதாகவும் அந்த எண்ணிக்கை 46 வீதமாகும் என்றும் அவர் கூறினார். அத்துடன், அந்த மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து இனங்காணப்பட்டதாகவும், அந்த எண்ணிக்கை 26 வீதமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான காசநோயாளிகள்

இலங்கையில் அதிகரிக்கும் காசநோய் -மருத்துவ நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை | 8342 Cases Of Tuberculosis Are Found In Sri Lanka

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான காசநோயாளிகள் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அதன்படி மாநகர சபை எல்லைக்குள் 1200 காசநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


எதிர்வரும் 24ஆம் திகதி உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கொழும்பு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கண்டறியப்படாத காசநோயாளிகள்

இலங்கையில் அதிகரிக்கும் காசநோய் -மருத்துவ நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை | 8342 Cases Of Tuberculosis Are Found In Sri Lanka

சமூகத்தில் 5800 கண்டறியப்படாத காசநோயாளிகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

2022 இல் கண்டறியப்பட்ட காசநோயாளிகளில் பெரும்பாலானவர்கள் ஆண்கள். அந்த எண்ணிக்கை 63.7 சதவீதம். அப்போது 36.3 சதவீதம் பெண்கள் இருந்தனர்.

மேலும், 2022 ஆம் ஆண்டில், 187 குழந்தைகள் காசநோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கண்டறியப்படாத சுமார் 5800 காசநோயாளிகள் சமூகத்தில் சுதந்திரமாகச் சுற்றித்திரிகின்றனர். இந்த ஒரு நோயாளி பத்து அல்லது பதினைந்து பேருக்கு நோயை பரப்பலாம்.

மருத்துவர்களிடம் வரும் நோயாளிகள் காசநோயாளிகளாக இருந்தால் அவர்களை அடையாளம் காண்பது மிகவும் அவசியம்.

மறுபுறம், மருத்துவர்கள் சென்று நோயாளிகளைக் கண்டறிவது மிகவும் முக்கியம் எனத் தெரிவித்தார்.


மார்பு நோய்கள் நிறுவகத்தின் தலைவர் கலாநிதி போதிக சமரசேகர தெரிவிக்கையில்,

காசநோய் ஒரு தொற்று நோய். காசநோய்க்கான சிகிச்சைகள் உள்ளன.

தினமும் 6 மாதங்கள் சரியான அளவு மருந்தை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால் இந்நோய் குணமாகும்.

2035 ஆம் ஆண்டளவில்

இலங்கையில் அதிகரிக்கும் காசநோய் -மருத்துவ நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை | 8342 Cases Of Tuberculosis Are Found In Sri Lanka

2020 ஆம் ஆண்டில், 10 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 1.5 மில்லியன் மக்கள் காசநோயால் இறந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட பத்தாயிரம் காசநோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள்.

நீரிழிவு நோய், ஊட்டச்சத்து குறைபாடு, புற்றுநோய், எச்.என். வி. போன்ற நிலைகளால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவுடன் காசநோய் தாக்கும் எனத் தெரிவித்தார்.



வைத்தியர் நிருபா பல்லேவத்த, சுகாதார அமைச்சின் காசநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தெரிவிக்கையில்,

2035 ஆம் ஆண்டளவில் இலங்கையிலிருந்து காசநோயை இல்லாதொழிப்பதே ஒரே இலக்கு. அதற்கு, காசநோயாளிகள் முறையான சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம்.


இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார கல்வி பணியகத்தின் பணிப்பாளர் நிபுணரான டொக்டர் ரஞ்சித் பதுந்துதாவ, அதன் பிரதி பணிப்பாளர் நிபுணரான டொக்டர் அசந்தி பலபிட்டிய, காசநோய் மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் டொக்டர் ஒனலி ராஜபக்ச மற்றும் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர். 



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *