Vijay - Favicon

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை




Colombo (News 1st) நாட்டின் சில பிரதேசங்களில் இன்றும்(08) 100 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கண்டி, பதுளை, கேகாலை, குருணாகல், மாத்தளை, மொரனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய 07 மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலாளர் பிரிவு, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவு, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, கங்கவட்ட கோரளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் கற்பாறை சரிவுகள் மற்றும் மண்சரிவுகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் கோரிக்கை அறிவுறுத்தியுள்ளது. 

இதனிடையே, நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 44 வீதமாக உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் நிரம்பி வழியும் மட்டத்தில் இருப்பதாக நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் D.அபேசிறிவர்தன தெரிவித்தார்.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *