Vijay - Favicon

கற்களால் காவல்துறையினரை தாக்கிய 6 பெண்களால் பரபரப்பு..!


கைது 

அனுராதபுரத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்காக சென்ற காவல்துறையினரை தாக்கிய குற்றச்சாட்டில் 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு நேற்று புபுதுபுர பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 14 கிராம் 220 மில்லிகிராம் ஹெரோயினுடன் நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை காவல்துறையினரிடம் அழைத்துச் செல்ல தயாரான போது, ​​அவ்விடத்திற்கு வந்த சந்தேகநபர்களின் உறவினர்கள் 6 பேர் காவல்துறை உத்தியோகத்தர்களை கற்களால் தாக்கியுள்ளனர்.

கடமைக்கு இடையூறு – சட்டவிரோதமான ஒன்றுக்கூடியமை

கற்களால் காவல்துறையினரை தாக்கிய 6 பெண்களால் பரபரப்பு..! | 6 Women Attacked Police Stones Creating Commotion

காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் சிகிச்சைக்காக அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


காவல்துறை உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, சட்டவிரோதமான ஒன்றுக்கூடியமை மற்றும் கற்களால் தாக்கி காயங்களை ஏற்படுத்திய குற்றங்களுக்காக குறித்த ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடவுள்ளனர்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *