Vijay - Favicon

ஜெனிவாவில் அலி சப்ரியின் செயற்பாடுகள்! கடும் அதிருப்தியில் ரணில்: எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு


ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வரும் 51ஆவது கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் கலந்துக்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் செயற்பாடுகளில் அதிபர் ரணில் விக்ரமசிங்க கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பேரவையின் கூட்டத் தொடரில் அலி சப்ரி ஆற்றிய உரையை அதிபர் ரணில் விக்ரமசிங்க கடுமையாக சாடியுள்ளார்.



அத்துடன் ஒட்டு மொத்தமாக அமைச்சர் அலி சப்ரியின் செயற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துரையாடியுள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சர் பதவியில் நீக்க தீர்மானம்

இந்நிலையில், அலி சப்ரியை தொடர்ந்தும் வெளிவிவகார அமைச்சர் பதவியில் வைத்திருப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் என இதன் போது பேசப்பட்டுள்ளது.


இவ்வாறான நிலைமையில், அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது அலி சப்ரிக்கு வேறு ஒரு அமைச்சு பதவி வழங்கப்படும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *