“முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள 37 கிராமங்கள் மகாவலி வலயத்திற்குள் உள்வாங்குவதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன.”
இவ்வாறு, நாடாளுமன்றத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வெளிப்படுத்தியுள்ளார்.
புதிய பிரதேச செயலகம்
தொடர்ந்து அவர்,
“மகாவலி அதிகார சபையால் தமிழர்களின் பூர்விக நிலங்கள் பறிக்கப்பட்டு, அவற்றை தென்பகுதி சிங்கள மக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.
தமிழர் பகுதி நிலங்களை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட பகுதிகளில் புதிய பிரதேச செயலகம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.” என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கூறியுள்ளார்.