Vijay - Favicon

340 உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது.


 

இதற்கமைவாக அவற்றின் அதிகாரம் இன்றில் இருந்து ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களின் கீழ்.கொண்டுவரப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி நிறுவனங்கள் இன்று (20) முதல் பொதுமக்களுக்கு தொடர்ந்து சேவையை வழங்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஏற்கனவே எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. அதன்படி, அந்த நிறுவனங்களின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் இன்று முதல் ஆணையர்கள் மற்றும் செயலாளர்களின் கீழ் கொண்டுவரப்படும்.

2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தொடர்ந்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் 340 உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிக்காலம் அந்த ஆண்டு மார்ச் 20ஆம் திகதி ஆரம்பமானது. எல்பிட்டிய உள்ளூராட்சி சபைக்கு மட்டும் தனித் தேர்தல் நடத்தப்பட்டதன் காரணமாகஇ அதன் உத்தியோகபூர்வ பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பமானது. எல்பிட்டிய உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடைகிறது

340 உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. அந்த நிறுவனங்களின் உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்க அமைச்சருக்கு அதிகாரம் இல்லை
இதன்படி, 29 மாநகர சபைகளின் அதிகாரம் மாநகர ஆணையாளர்களின் கீழும், 36 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் அதிகாரம் அந்த நிறுவனங்களின் செயலாளர்களின் கீழும் இருக்கும்.

 

The post 340 உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. appeared first on Malayagam.lk.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *