நிமல் சிறிபால டி சில்வா தாக்கல் செய்த மனு தொடர்பில் ஒக்டோபர் 19 ஆம் திகதி சமர்பிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சில்வாவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகித்து வந்த பதவிகளில் இருந்து நீக்கும் தீர்மானத்தை ரத்து செய்யுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.