நாடாளுமன்றத்தின் மாதாந்திர மின் கட்டணம் ரூ. 06 மில்லியன் என இன்று (20) தெரியவந்துள்ளது.
சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும மற்றும் மின்வலு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற வார்த்தைப் பரிமாற்றத்தின் போதே இது இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தின் மாதாந்த மின்சாரக் கட்டணம் ரூ. 06 மில்லியன், அதனைக் குறைப்பதற்கு சூரிய சக்தியில் இயங்கும் அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் திரு.மன்னப்பெரும மேலும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் காஞ்சன விஜேசேகரவும் சூரிய சக்தி மின்சார அமைப்பின் முக்கியத்துவத்தை எதிரொலித்துள்ளார்.
எவ்வாறாயினும், அதற்கான நிதியை அமைச்சினால் வழங்க முடியாவிட்டாலும் தொழில்நுட்ப ஆதரவை வழங்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.