பாதிப்புக்குள்ளாகும் இலங்கையர்களுக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்கவும், ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி வாய்ப்பை அதிகரிக்கவும் ஒற்றுமையைக் காட்டவும் நன்கொடைகளை வழங்கவும் உலக நாடுகளுக்கு இலங்கைக்கான ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் தனது சமூக ஊடக கணக்குகளில் வெளியிடப்பட்ட வீடியோவில் வேண்டுகோள் விடுத்தார்.
சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் இலங்கையின் வெற்றிகள் தற்போதைய நெருக்கடியால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக திருமதி சிங்கர்-ஹம்டி தெரிவித்தார்.