மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதம அதிதி – வண. கலாநிதி வலவஹங்குனவேவே தம்மரதன தேரர் மற்றுமொரு மக்கள் எழுச்சி அலை குறித்து எச்சரித்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (18) விகாரைக்கு விஜயம் செய்த போது தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு 6 மாதங்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்தாவிட்டால், மீண்டும் எழுச்சி பெறும் மக்கள் எழுச்சியை நிறுத்த முடியாது என தேரர் குறிப்பிட்டுள்ளார்.