ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ரஆராச்சி, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் மின்சாரக் கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
விவசாயிகளின் நெல் அறுவடைக்கு உத்தரவாத விலையில் கொள்வனவு செய்யப்படுவதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்குமாறும் அவர் தனது கடிதத்தில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மின்சாரக் கட்டணம் தொடர்பில் மகா சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் நல்ல பலனைத் தராது என குறிப்பிட்டுள்ள அவர், இது பொதுமக்களின் மற்றொரு சுற்றுப் போராட்டத்திற்கு வழிவகுக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.