பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் நான்காம் ஆண்டு பட்டதாரி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, யக்கல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான அஞ்சனா குலதுங்க என்ற காணாமல் போன மாணவியை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 16ஆம் திகதி காணாமல் போன மாணவர் எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்று அவர் தங்கியிருந்த தங்கும் அறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவன் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பதுடன் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.