கடந்த வாரம் உலக உணவுத் திட்டத்தினால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வரட்சிக்குப் பின்னர் இலங்கையில் மிகக் குறைந்த அரிசி உற்பத்தியைக் கொண்ட ஆண்டாக 2022 அமையும்.
அதனால் இந்த ஆண்டு அரிசி உற்பத்தி 3 மில்லியன் மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அண்மையில் விதித்துள்ள தடையே அரிசி உற்பத்தி பாதிப்பிற்கு முக்கிய காரணம் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக 6.3 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் – தேசாய