‘ஹரக் கட்டா’ என்றழைக்கப்படும் நந்துன் சிந்தகாவை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் வரை துபாயில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் காவலில் வைக்குமாறு இலங்கை அரசாங்கம் ஐக்கிய அரபு அமீரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கிடைத்த ஆலோசனைக்கு அமைய வெளிவிவகார அமைச்சு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
நேற்று (18) காலாவதியான ஹரக் கட்டாவை துபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டுவர ஐக்கிய அரபு அமீரகம் ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.
ஹரக் கட்டா அமைப்பு கடந்த காலங்களில் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் படகுகளை அனுப்பியுள்ள போதிலும், ஏழு கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் மாத்திரம் பொலிஸ் திணைக்களம் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளதாக தேசிய பாதுகாப்புத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு கவுன்சில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
‘ஹரக் கட்டா’வை இலங்கைக்கு கொண்டுவருவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசிடம் ஒப்படைக்க பொலிஸ் திணைக்களம் தயாரித்திருந்த கோப்பு சமர்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு சபை இந்தத் தகவலைக் கண்டுபிடித்திருந்தது.
‘ஹரக் கட்டா’வினால் அனுப்பப்பட்ட கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொருட்கள் தொடர்பான நான்கு வழக்குகளுக்கு திறந்த வாரன்ட்களை பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் நீதிமன்றில் உண்மைகளை அறிக்கை செய்திருந்த போதிலும், அரசாங்கப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமாகியமையினால், குற்றச்சாட்டுகள் அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை.
கடந்த வாரமே ‘ஹரக் கட்டா’வை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவை இலங்கை பொலிஸார் பெற்றிருந்தமையும் தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில், இந்த அறிக்கையில் ஏனைய குற்றச்சாட்டுகளை உள்ளடக்குவதற்கு மேலும் கால அவகாசம் வழங்குமாறு வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் கைதிகளை பரிமாறிக்கொள்வதற்காக 2014ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் இன்னும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படாததால், அந்தச் சட்டத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ஜனாதிபதி உத்தரவிட்டார்.