நெருக்கடி
306 இலங்கை அகதிகளை ஏற்றி சென்ற கப்பல் காற்றினால் தாக்கப்பட்டு பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்னாமுக்கு இடையே தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் சிங்கப்பூர் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளார்கள்.
இது நடைபெறுவதற்கு சரியாக 6 மணிநேரம் முன்பாக 150 இலங்கை பெண்கள் ஓமான் நாட்டிற்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டு அங்கே அடிமைகளாக விற்பனை செய்யப்பட்டுள்ளார்கள்.
இதற்கிடையே புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டு பிரான்சில் இருந்து இலங்கையர்கள் நாடு கடத்தப்படுகின்றார்கள் என்ற செய்தி வெளியகியது.
அதிலும் குறிப்பாக சிறிலங்கா செல்லும் பட்சத்தில் எமது உயிருக்கு ஆபத்து என கோரிக்கையாளர்கள் அவல குரல் எழுப்பியும் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்படுள்ளது.
அதே போல சுமார் 120 இலங்கை தமிழ் புகலிட கோரிக்கையாளர்களை தன்னிச்சையாக நாடு திரும்புமாறும் அதற்கு மறுக்கும் பட்சத்தில் மூன்றாவது நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவீர்கள் என பிரித்தானியா அறிவித்துள்ளது.
ஆக சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காய் புலம்பெயர் தேசங்கள் நோக்கி பயணிக்க கூடியவர்கள் உண்மையில் நெருக்கடியில் இருந்து மீள்கின்றார்களா ? இல்லை நெருக்கடிக்குள் ஆழ சிக்கிக்கொள்கின்றார்களா ?
என்பது பற்றிய விரிவான பார்வையோடு இது சாமானியனின் சாட்சியம்