Vijay - Favicon

சிங்கப்பூர் கடற்பரப்பில் விபத்தில் சிக்கிய 303 இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை : வெளிவிவகார அமைச்சு!


சட்டவிரோதமான முறையில் கனடாவுக்கு படகில் பயணித்த போது விபத்தில் சிக்கிய இலங்கையர்கள் விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார். படகு ஆபத்தில் சிக்கியபோது அதில் இருந்த தொழிலாளர்கள் தப்பி ஓடியதாக முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற மியான்மரின் மீன்பிடிக் கப்பல் கடந்த திங்கட்கிழமை வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் கடற்பரப்பில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கரை ஒதுங்கியது.

இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக படகில் இருந்த ஒருவர் இலங்கை கடற்படைக்கு அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, வியட்நாம் சிங்கப்பூர் மற்றும் மலேசியா அரசாங்கங்களை தொடர்புகொண்டு குறித்த படகு தொடர்பான தகவல்களை இலங்கை பரிமாறிக்கொண்டது.  குறித்த படகுக்கு அருகில் பயணித்த ஜப்பானிய கப்பல் மூலம் இலங்கையர்கள் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *