Vijay - Favicon

பகுதி நேர வகுப்புக்கு செல்வதாக கூறி விடுதிகளுக்கு செல்லும் மாணவ,மாணவிகள்..! காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை


கைது

பகுதி நேர வகுப்புகளுக்கு செல்லும் மாணவ,மாணவிகள் தங்கும் விடுதிகளுக்கு செல்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய நடத்திய தேடுதலில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படும் நான்கு பேர் மற்றும் மூன்று இளம் வயது ஜோடிகளை கைது செய்துள்ளதாக குளியாப்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



பகுதி நேர வகுப்புகளுக்கு செல்வதற்காக வீடுகளில் இருந்து வரும் இளம் இளைஞர்,யுவதிகள் தங்கும் விடுதிகளுக்குள் செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.



இதனையடுத்து குளியாப்பிட்டிய நீதவானிடம் பெற்றுக்கொண்ட தேடுதல் அனுமதியுடன் மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதி நடத்தும் போர்வையில் பாலியல் தொழில்

பகுதி நேர வகுப்புக்கு செல்வதாக கூறி விடுதிகளுக்கு செல்லும் மாணவ,மாணவிகள்..! காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை | 3 Young Couples Arrested

குளியாப்பிட்டிய நகரில் பிரதான பாடசாலைகளுக்கு அருகில் தங்கும் விடுதி நடத்தும் போர்வையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் கைது செய்யப்பட்டமை முக்கிய விடயமாகும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.


பகுதி நேர வகுப்பு வந்து தங்கும் விடுதியில் கைது செய்யப்பட்ட மூன்று இளம் ஜோடிகளை அவர்களின் பெற்றோரை அழைத்து காவல்துறையினர் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.


அதேவேளை விடுதி உரிமையாளர்களுக்கு காவல்துறையினர் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் குளியாப்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *