இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, சமூக வலைத்தளங்களில் இயங்கி வருகிறார்.
இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் எப்போதும் செயற்பாட்டிலே இருப்பதுடன், அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்த வண்ணம் இருக்கிறார்.
இதனால், இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை பல மில்லியன் கணக்கானவர்கள் பின்தொடர்கின்றனர்.
பெருமை
இந்தநிலையில், இப்போது விராட் கோலியை 250 மில்லியன் பேர் தொடர்கின்றனர்.
தற்போது, ஆசியாவிலே இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்ட முதல் இந்திய பிரபலம் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
இதேவேளை, கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்சிக்கு அடுத்தபடியாக அதிக பின்தொடர்பவர்களை கொண்ட விளையாட்டு வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார்.