கடந்த ஐந்து நாட்களில் பதிவாகிய 265 வாகன விபத்துக்களில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
“கடந்த ஐந்து நாட்களில் 25 இறப்புகள் பதிவாகியுள்ளன. இளம் சாரதிகளின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
அண்மைய நாட்களில் இலங்கையில் விபத்து சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.