Vijay - Favicon

இசை நிகழ்ச்சியில் கொலை செய்யப்பட்ட 24 வயது இளைஞன் – 17 வயதுடைய சிறுவன் கைது!


கொழும்பு துறைமுக நகரத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 24 வயதுடைய இளம் வர்த்தகர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.



இந்த சம்பவம் தொடர்பில் 17 வயதான சிறுவன் ஒருவரை கொழும்பு துறைமுக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


சம்பவம் தொடர்பில் மேலும் நால்வரை கைது செய்ய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



மேலும், கைது செய்ய தேடப்படும் நபர்களில் கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரின் மருமகனும் அடங்குவதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இசை நிகழ்ச்சியில் கொலை செய்யப்பட்ட 24 வயது இளைஞன் - 17 வயதுடைய சிறுவன் கைது! | 24 Years Man Killed In Colombo Musical Show

அருகில் உள்ள கண்கானிப்பு கமராக்களை சோதனை செய்ததன் மூலம் இந்த தாக்குதல் நடக்கும் விதத்தை கண்டறிய முடிந்தது.



உயிரிழந்த இளம் வர்த்தகர் சந்தேகநபரின் 17 வயது முன்னாள் காதலியுடன் இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது.


முன்னாள் காதலி வேறு ஒருவருடன் வருகை தந்ததால் சந்தேக நபர் கோபமடைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *