Colombo (News 1st) மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான 23 பில்லியன் ரூபா நிலுவையை விநியோகஸ்தர்களுக்கு செலுத்தவேண்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக அவர்களால் புதிய முன்பதிவுகளை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இதுவொரு பிரதான காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.
நிலுவையை செலுத்துவதற்கான நிதியை உடனடியாகப் பெற்றுக்கொடுக்குமாறு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்திய கடன் திட்டத்தினூடாக மேலும் 53 வகையான மருந்துகள் கடந்த வாரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.