Vijay - Favicon

2021 ஆம் ஆண்டில் 20 தேங்காய்களை திருடியவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை




Colombo (News 1st) திவுலப்பிட்டிய, கேஹல்-எல்ல பகுதியில் தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து 20 தேங்காய்களை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு மினுவான்கொடை நீதவான் நீதிமன்றம்  ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளது. 

ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்த நீதவான் அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

குறித்த 10 வருடங்களை நன்னடத்தையுடன் கழிக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டார். 

கேஹல்-எல்ல பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தைக்கே இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினத்தில், குறித்த நபர் 1200 ரூபா பெறுமதியான 20 தேங்காய்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 
 





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *