இரண்டு நீர்நிலைகளில் அடையாளம் தெரியாத இரண்டு உடல்கள் மிதப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு சடலம் கடுகஸ்தோட்டை ஹலொலுவ பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் மிதந்த நிலையில் மற்றைய சடலம் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு சடலங்களும் தற்போது கண்டி போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.