இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.
அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.
இதன்படி இந்தியா- அவுஸ்திரேலிய இடையிலான முதலாவது ஒரு நாள் துடுப்பாட்ட போட்டி பகல்-இரவு மோதலாக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
ஹர்திக் பாண்டியா
இந்தியாவில் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக் கோப்பை துடுப்பாட்ட போட்டி இடம்பெறவுள்ளதால், அதற்கு அணியை சரியான திட்டமிடலுடன் தயார்படுத்துவதற்கு இந்த தொடர் அடித்தளமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இன்றைய போட்டியில் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்துகிறார்.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 188 ஓட்டங்களுக்கு சகல ஆட்டமிழப்புகளையும் சந்தித்தது.
மிச்சரல் மார்ஸ்
அவுஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக மிச்சரல் மார்ஸ் 81 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க ஏனைய வீரர்கள் பிரகாசிக்க தவறியதால் அவுஸ்திரேலிய அணியின் ஊட்ட எண்ணிக்கை 188க்குள் மட்டுப்படுத்தப்பட்டது.
இந்தியா: சுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், முகமது ஷமி.
அவுஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித், மார்னஸ் லபுஸ்சேன், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, சீன் அப்போட்.