Vijay - Favicon

யாழில் வறுமையில் தவிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள்!


யாழ்ப்பாண மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் இருப்பதாக மாவட்ட செயலக அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.


கொரோனா பெருந்தொற்றின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறு பல கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.



இதனடிப்படையில், அதிகமாக கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 370 கர்ப்பிணிப் பெண்கள் வறுமை நிலையில் காணப்படுவதாக கூறப்படுகின்றது.

பிரதேச வாரியாக நிலை 

யாழில் வறுமையில் தவிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள்! | 1814 Pregnant Women Are Poverty In Jaffna District

இதேவேளை, பருத்தித் துறைப் பிரதேச செயலகத்தில் 226 கர்ப்பிணிப் பெண்களும், சங்கானைப் பிரதேச செயலகத்தில் 157 கர்ப்பிணிகளும், தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 139 கர்ப்பிணிகளும், யாழ்ப்பாண பிரதேச செயலகப் பிரிவில் 138 கர்ப்பிணிகளும், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் 128 கர்ப்பிணிகளும் உள்ளனர்.


சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 118 கர்ப்பிணிகளும், உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் 117 கர்ப்பிணிகளும், மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் 98 கர்ப்பிணிகளும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 97 கர்ப்பிணிகளும், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் 91 கர்ப்பிணிகளும் உள்ளனர்.


காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் 40 கர்ப்பிணிகளும், வேலணைப் பிரதேச செயலகப் பிரிவில் 49 கர்ப்பிணிகளும், ஊர்காவற்துறை பிரதேச செயலகப் பிரிவில் 25 கர்ப்பிணிகளும், நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் 21 கர்ப்பிணிகளும் சேர்த்து மொத்தமாக 1814 கர்ப்பிணி பெண்கள் வறுமையில் உள்ளதாக கூறப்படுகின்றது.



அதேசமயம், கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் அரசாங்க கொடுப்பனவு 2 ஆயிரம் ரூபா 8 மாதங்களுக்கு மேலாக வழங்கப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *