2022 இல் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட காலாவதியான கண்ணீர் புகை குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டதாக கொழும்பு பிரதி காவல்துறை மா அதிபர் ஜகத் குமாரசிறி தெரிவித்தார்.
அழிப்பதற்காக காலாவதியான மற்றுமொரு கண்ணீர்ப்புகை குண்டுகள் கையிருப்பு இருப்பதாக அவர் கூறினார்.
காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகள்
போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்று அவர் கூறினார்.
காலாவதியாகும் கண்ணீர் புகை குண்டுகள் பிரிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பான நடைமுறைகளின் கீழ் அழிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.