Vijay - Favicon

33 கொலைகளை புரிந்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்டது 1310 ஆண்டுகள் சிறை


எல் சால்வடோர் நாட்டில் பல கொலைவழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிக்கு 1310 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



எல் சால்வடோர் நாட்டில், குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகள் மீது அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில், குற்றம் செய்தவர் என்ன பின்னணி உடையவர்களாக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி அரசு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

 நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்

33 கொலைகளை புரிந்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்டது 1310 ஆண்டுகள் சிறை | 1310 Years Imprisonment For 33 Murders

இந்த நிலையில், மாரா சல்வத்ருச்சா என்ற கேங்ஸ்டர் கும்பலின் முக்கியமானவர் வில்மர் செகோவியா. இவர் பல கொலைகள் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தது உள்ளிட்ட பல வழக்குகள் இருந்தபோதிலும், 33 கொலைகள், 9 கொலைச்சதிகள், போன்ற குற்றத்திற்கு வலுவான ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.



எனவே, இந்த வழக்கு விசாரணைகள் முடிந்து, வில்மருக்கு 1310 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்துள்ளது.


அதேபோல், 22 கொலைவழக்குகளில் தொடர்புடைய மிகுவல் ஏஞ்சல் போரிடிலோ என்பவருக்கு 945 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *